வலிப்பு நோயா ? : பாகம் 1
*****************************
கால் கை வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் இந்த கட்டுரை விளக்குகிறது.
++++++++++++++++++++++
இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கிறீர்கள்; உங்கள் திரையில் எழுத்துக்களும் படங்களும் தெரிகின்றன என்றால் என்ன அர்த்தம் –> உங்கள் அலைபேசி (அல்லது மடிக்கணினி அல்லது மேசைக்கணினி) ஒழுங்காக வேலை செய்கிறது என்று அர்த்தம்
ஒருவேளை
உங்கள் அலைபேசி (அல்லது மடிக்கணினி அல்லது மேசைக்கணினி) ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்
ஒன்று கணினியின் மையச் செயற்பகுதியில் (CPU) ஏதோ பிரச்சனை அல்லது மையச்செயற்பகுதியில் இருந்து வரும் கம்பியில் கோளாறு அல்லது மின் இணைப்புகலில் தகராறு அல்லது திரையில் பிழை இருந்தால் என்ன நடக்கும்
எழுத்துக்களும் படங்களும் தெளிவில்லாமல் இருக்கும் . . .
சிறு பிழை என்றால் சிறிது தெளிவில்லாமல் இருக்கும். அதேநேரம்
பிரச்சனை, கோளாறு, தகராறு, பிழை அதிகம் இருந்தால், திரையில் தெரிவதை வைத்து ஒன்றுமே அறிந்து கொள்ள முடியாது
-oOo-
கணினியில் விசைப்பலகை, எலி போன்ற கருவிகளின் மூலம் செய்தி உள்ளே செல்கிறது
அதே போல் நமது உடம்பில் புலன்களின் மூலம் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) செய்தி உள்ளே செல்கிறது
கணினியின் மையச் செயற்பகுதியில் இந்த செய்திகள் உள்வாங்கப்பட்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது
அதே போல் நமது மூளையில் இந்த செய்திகள் உள்வாங்கப்பட்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது
கணினியில் இருந்து வரும் கட்டளைகள் திரையில் தெரிகின்றன, அல்லது அச்சுபொறியின் மூலம் அச்சடிக்கப்படுகின்றன
மூளையில் இருந்து வரும் கட்டளைகள் மூலம் தசைகள் இயக்கப்படுகின்றன, அல்லது பிற செயல்கள் நடக்கின்றன
-oOo-
அலைபேசி அல்லது கணினி ஒழுங்காக வேலை செய்தால் திரையில் படம் முறையாக தெரியும்
மூளை ஒழுங்காக வேலை செய்தால் கை கால் தசைகள் செய்ய வேண்டிய வேலைக்கு ஏற்றாற்போல் சுருங்கி விரியும்
-oOo-
அலைபேசி அல்லது கணினியின் மின்னினைப்புகளில் பிரச்சனை என்றால் திரையில் படம் முறையற்று தெரியும்
மூளையின் மின் இணைப்புகளில் அல்லது வேதிபொருட்களில் பிரச்சனை என்றால் கைகால் தசைகள் முறையாக சுருங்கி விரியாமல் தாறுமாறாக சுருங்கி விரியும். இதுவே கை கால் வலிப்பு எனப்படுகிறது
கால் கை வலிப்பு என்பது மருவி, காக்காய் வலிப்பு என்று மாறி விட்டது
-oOo-
மூளையின் மின் இணைப்புகளில் ஏன் பிரச்சனை வருகிறது ?
மூளையின் வேதிபொருட்களில் ஏன் பிரச்சனை வருகிறது ?
இந்த பிரச்சனைகளால் கை கால் வலிப்பு தவிர வேறு என்ன பாதிப்புகள் ஏற்படலாம் ?
இவற்றை எப்படி சரி செய்ய வேண்டும் ?
தொடர்ந்து பார்க்கலாம்
-oOo-
இந்த கட்டுரை பலருக்கும் பயன்பட இதை உங்கள் பக்கத்தில் மற்றும் குழுக்களில் பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் சந்தேகங்களை மறுமொழியில் கேளுங்கள்