கேள்வி
Fallopian tubal block இதற்கு பேலியோவில் தீர்வு கிடைக்குமா…
பதில்
இந்த அடைப்பு எதனால் எற்பட்டது என்பதை பொறுத்து தீர்வு மாறுமடும்
உதாரணமாக
காச நோயினால் இந்த அடைப்பு ஏற்பட்டிருந்தால்
பேலியோவினால் தீர்வு கிடைக்காது
கேள்வி
எதனால் அடைப்பு என்பதை Laproscopy செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியுமா ?
பதில்
இது நபருக்கு நபர் மாறுபடும் மேடம்
நிறைய விஷயங்கள் உள்ளன
இதை ஒரு வரியில் அல்லது ஒரு பதிவில் விளக்க முடியாது
எளிமையாக சொல்லவேண்டும் என்றால்
உங்கள் எடை அதிகமாக இருந்து
உங்களுக்கு PCOD இருந்தால் –> பேலியோ மூலம் மட்டுமே தீர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது
வேறு பிரச்சனைகள் என்றால் –> மருத்துவரை நம்புவது நல்லது. அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 9 வருடம் படிக்க வேண்டும்
நீங்கள் ஒரு மருத்துவரிடம் உதவி கேட்கலாம்
உதாரணமாக :
1. கர்ப்பம் தரிப்பதில் சில பிரச்சனைகள் உள்ளன. அவற்றை தீர்க்க ஆலோசனை கேட்பது என்பது உதவி கேட்பது
2. அறுவை சிகிச்சை தேவையென்றால் அதை செய்யச்சொல்வது உதவி கேட்பது
அல்லது
நீங்கள் ஒரு மருத்துவரிடம் சந்தேகம் கேட்கலாம்
சந்தேகத்தை உதவியாக
அல்லது
உதவியை சந்தேகமாக
கேட்டால்
குழப்பமே மிஞ்சும்
நீங்கள் தற்சமயம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால்
அல்லது
சிகிச்சை எடுக்க நினைத்துக்கொண்டிருந்தால்
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு வரும் விடைகள் மூலம்
குழப்பத்தில் ஆழ்வீர்கள்
என்பது என் கருத்து
கேள்விகளை நேரடியாக கேளுங்கள்
ஒருவேளை இங்கு தயக்கம் என்றால்
மற்றொரு மருத்துவரிடம் கேளுங்கள்
அதை விடுத்து
கேள்வியை சிறிது மாற்றி கேட்டால்
பதிலில் சிறிது மாறி வரும்
உங்கள் குழப்பம் அதிகரிக்குமே தவிர குறையாது
-oOo-
//எதனால் அடைப்பு என்பதை Laproscopy செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியுமா//
இதற்கு பதிலாக
குழந்தையில்லாமல் இருக்கும் பெண் ஒருவருக்கு மருத்துவர் லேப்பரஸ்கோப்பி பரிந்துரைத்துள்ளார்
அந்த பெண் பயப்படுகிறார்
என்ன செய்ய வேண்டும்
என்ற கேள்வி வந்திருந்தால்
அதற்கு நாங்கள் அளிக்கும் பதில் மூலம்
குழப்பத்திற்கு விடை கிடைத்திருக்கும்
அப்படி இல்லாமல்
//எதனால் அடைப்பு என்பதை Laproscopy செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியுமா//
என்று கேட்கும் போது
இதற்கு பதில்
எதனால் அடைப்பு என்பதை Laproscopy செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியும் என்று இல்லை
சில நேரங்களில் Laproscopy இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்
சில நேரங்களில் Laproscopy அவசியம்
என்று தான் வரும்
இந்த பதிலானது
நீங்கள் கேட்ட கேள்விக்கு சரியானது தான்
உங்கள்
உங்கள் குழப்பம் அதிகரித்திருக்கும்
உங்கள் நோக்கம் நிறைவேறியிருக்காது
இது தான் – தவறான கேள்விகள் தான்
மருத்துவர் நோயாளி கருத்து பரிமாற்ற பிரச்சனைக்கு
அதாவது
மருத்துவர் ஒன்றுமே சொல்ல மாட்டேங்கிறார் என்ற நோயாளியின் புலம்பலுக்கும்
என்ன சொன்னாலும் திரும்ப திரும்ப கேட்கிறார்கள் என்ற மருத்துவரின் சலிப்பிற்கும்
வேர்க்காரணம்
இது போன்ற
பாதி மறைத்து பாதி வெளிப்படுத்தி கேட்கும் கேள்விகள் தான்
மருத்துவரை பொறுத்தவரை
கேட்ட கேள்விக்கு பதில் கூறியாகிவிட்டது
நோயாளியை பொறுத்தவரை
குழப்பம் தீரவில்லை
ஏன்
என்ன காரணம்
காரணம் என்னவென்றால்
நோயாளி தவறான கேள்வியை கேட்டார்
-oOo-
https://www.facebook.com/groups/tamilhealth/permalink/1469899006533907