கோவிட்19 தடுப்பு நடவடிக்கைக்கான பொது நடவடிக்கைகள் குறித்த கையேடு
- பொதுவான அறிவுரைகள்
- வங்கிகள் / காப்பீடு நிறுவனங்கள் / பிற நிதி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- பொது போக்குவரத்து உரிமையாளர்கள் / ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- மளிகைக்கடை / பழக்கடை / காய்கறி கடை / மீன் கடை / மருந்தகங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- அரசு அலுவலகங்கள் / தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- தங்கும் விடுதிகள் / உணவகங்களின் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- விடுகளில் வேலை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- குடியிருப்புகள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- வீட்டினுள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- குழந்தைகள் குறித்து கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
-
பொதுவான அறிவுரைகள்
- 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரழிவு, அதிக உடற்பருமன், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருக்கவும்
- முறையான 2 அடுக்கு முகக்கவசம் பயன்படுத்தவும். கைகளை குறைந்தபட்சம் 40 முதல் 60 வினாடிகள் கழுவவும், உடல் நலன் இல்லை என்றால் வீட்டில் இருக்கவும்
- மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த வித வேதியல் பொருட்களையும் பயன்படுத்தவேண்டாம்
- சந்தேகங்களை அலைபேசியில் / தொலைபேசியில் கேட்கவும். உடல் நலக்குறைவு என்றால் உடனே மருத்துவமனை செல்லவும்
- வீட்டில் தனிமைப்படுத்த வேண்டி இருந்தால் அடுத்தவர்களுடன் பழகவேண்டாம்
- ஏதாவது சந்தேகம் இருந்தால் 104 எண்ணிற்கு அழைக்கவும். அவசர சேவைக்கும் 108 எண்ணிற்கு அழைக்கவும்
- வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடவும்
- மற்றவர்களுக்கு முடிந்த அளவு உதவவும்
-
வங்கிகள் / காப்பீடு நிறுவனங்கள் / பிற நிதி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- வங்கிகள் / காப்பீடு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்கும் படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கட்டிடத்தினுள் இடம் இல்லை என்றால் வெளியில் இடம் ஏற்படுத்த வேண்டும்
- கைகளை கழுவும் கிருமி நாசினி போதிய அளவில் இருக்கவேண்டும். வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும் போது கைகளை கழுவ வேண்டும்
- உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் கருவிகள் போதுமான அளவு இருக்கவேண்டும். 37 டிகிரி செல்சியல் அல்லது 98.6 டிகிரி பாரன்ஹைட் வெப்பத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளரை அனுமதிக்கவேண்டும்
- காசோலை செலுத்தும் பெட்டியை வங்கிக்கு வெளியில் வைக்கவேண்டும். இதன் மூலம் வங்கிக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்
- பணம் கையாளுபவர்கள் தங்களின் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்
- தானியங்கி பணம் வழங்கியில் இருக்கும் காவலர்கள் தங்களின் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் 1 மீட்டர் இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும்
- அலுவலகம் மற்றும் தானியங்கி பணம் வழங்கி இரண்டும் அடிக்கடி கிருமி நாசினி கொன்று சுத்தப்படுத்தப்படவேண்டும்
- ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும்
- கோவிட்19 குறித்த விபரங்களை அனைவரும் படிக்கும் படி வைக்கவும் வங்கியின் உள்ளேயும் வெளியேயும் வைக்கவும்
-
காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- ரோந்து பணியில் இருக்கும் போது உங்களை நோய் தொற்றில் இருந்து காத்துக்கொள்ளவும்
- பிறரிடம் இருந்து 1-1.5 மீட்டர் அல்லது 6 அடி தூரம் கடைபிடிக்கவும்
- கைகளை கழுவவும்.. கைகளை கழுவாமல் முகத்தை தொட வேண்டாம்
- காய்ச்சல், இருமல், மூச்சு விட சிரமம் போன்றவை கோவிட்19 நோயின் அறிகுறிகள் என்று அறிந்து கொண்டு இவை இருந்தால் உடனே சிகிச்சை எடுக்கவும். நோய் தொற்று எற்பட்டதில் இருந்து 2 முதல் 14 நாட்கள் வரை இந்த அறிகுறிகள் ஏற்படலாம்
- பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகு துணிகளை துவைக்கவும்.
- மருத்துவமனைகள், தனிமை படுத்தல் நிலையங்கள் போன்ற இடங்களில் அல்லது அவற்றின் அருகில் பணிபுரியும் போது கையுரை, முகக்கவசம் அணியவும்
- அலுவலக கோப்புகள், தாள்கள் பயன்படுத்தும் போது கையுறை பயன்படுத்தவும்
-
பொது போக்குவரத்து உரிமையாளர்கள் / ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் வாகனத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தவும்
- ஓட்டுனரும் நடத்துனரும் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணியவேண்டும். வாகனத்தினுள் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும்
- கைகளை சுத்தம் செய்ய போதிய அளவு கிருமி நாசினி வாகனத்தில் இருக்க வேண்டும்
- இருக்கை அமைப்புகள் குறித்த அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவேண்டும்
- பயணிகளின் வெப்பத்தை சோதிக்க வெப்பமானிகள் இருக்கவேண்டும்
- வாடகை சீருந்தில் முன் இருக்கையில் பயணிகளை அமர அனுமதிக்கக்கூடாது
- ஒட்டுனரோ, நடத்துனரோ கதவை திறந்தாலோ, அல்லது பயணிகளின் பொருட்களை கையாண்டாலோ, அவர்கள் தங்கள் கையை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்
- காவல் துறையினரின் ஆணைகளை கடைபிடிக்க வேண்டும்
- சந்தை போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்
- பயணம் முடிந்த பிறகு ஓட்டுனர்கள், நடத்துனர்கள், உதவியாளர்கள் கையை கழுவி, குளித்து, உடைகளை துவைக்க வேண்டும்
- வாகனத்தில் கோவிட்19 குறித்த விபரங்களை அனைவரும் படிக்கும் படி வைக்கவும்
-
மளிகைக்கடை / பழக்கடை / காய்கறி கடை / மீன் கடை / மருந்தகங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- அரசின் விதிமுறைகளை கடைபிடிக்கவும்
- கடையின் உள்ளேயும், வெளியேயும் சமூக இடைவேளையை கடைபிடிக்க போதிய வசதிகளை செய்து தரவும்
- தினமும் கிருமி நாசினி கொண்டு பொருட்கள் அலமாரிகள் போன்றவற்றை துடைக்கவும்
- பணிபுரிபவர்கள் முக கவசம் அணிய வேண்டும்
- பணிபுரிபவர்கள் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
- வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிய வேண்டும்
- முடிந்தவரை வீட்டில் பொருட்களை கொண்டு கொடுக்கவும்
- கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி போதிய அளவில் இருக்கட்டும்
-
அரசு அலுவலகங்கள் / தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- அனைத்து பணியாளர்களுக்கும் கோவிட்19 குறித்து கூறவேண்டும்
-
தங்கும் விடுதிகள் / உணவகங்களின் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
-
கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- சமூக இடைவேளையை பயன்படுத்தவும்
- கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வைத்திருக்கவும்
- தொடாமல் வெப்பத்தை கண்டறியும் கருவி மூலம் உள்ளே வரும் அனைவரின் வெப்ப அளவை பார்த்து காய்ச்சல் உள்ளதா என்று சோதிக்கவும்
- கோவிட்19 குறித்த தகவல்களை அனைவரும் வாசிக்கும்படி வைக்கவும்
- கையால் தொடக்ககூடிய அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்யவும், துடைத்து வைக்கவும், கிருமி நாசினி பயன்படுத்தவும்
- முக கவசம் அணிவது கட்டாயம்
- ஆசிரியர்கள் தங்கள் உடல் நலன் மேல் அதிக கவனம் கொள்ள வேண்டும்
- அரசிடம் இருந்து வரும் உத்தரவுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
-
விடுகளில் வேலை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- வீட்டு வேலை செய்பவர்களுக்கு முக கவசம் அளிக்கவும். அவர்கள் வீட்டினுள் வந்தவுடன் கைகளை கழுவ வேண்டும்
- தேவைப்பட்டால் மட்டுமே வீட்டிற்கு வெளியில் செல்ல வேண்டும்
- வெளியில் சென்று வந்தவுடன் கைகளை கழுவ வேண்டும்
- போதுமான சமூக இடைவேளையை கடைபிடிக்கவும்
- உணவு பரிமாறும் போது கையுறை பயன்படுத்தவும்
- அவர்களுக்கு கோவிட்19 இருக்கும் என்று சந்தேகம் இருந்தால் அவர்களை சிகிச்சை எடுக்க சொல்லவும்
-
குடியிருப்புகள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- மின் தூக்கி பயன்பாட்டை முடிந்த அளவு தவிர்க்கவும். தவிர்க்கமுடியவில்லை என்றால் கிருமி நாசினி பயன்படுத்தவும்
- தூய்மை பணியாளர்களுக்கு போதிய உபகரணங்களை அளிக்கவும்
- போதுமான அளவு முக கவசம் மற்றும் கிருமி நாசினி வைத்துக்கொள்ளவும்
- மின் சாதனங்களை பழுது நீக்குவது, நீர் குழாய்களை பழுது நீக்குவது ஆகிய செயல்களை முடிந்த அளவு குறைவாக செய்யவும்
- விருந்தினர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்
- விருந்தினர்களின் அடையாள அட்டை ஆகியவற்றை கையுறை அணிந்தே தொடும்படி காவல்காரர்களுக்கு அறிவுறுத்தவும்
- குடியிருப்பில் இருப்பவர்களுக்கு கோவிட்19 இருக்கும் என்று சந்தேகம் இருந்தால் அவர்களை சிகிச்சை எடுக்க சொல்லவும்
-
வீட்டினுள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- வீட்டின் வெளியில் எதையும் தொடவேண்டாம்
- மின் தூக்கிகளை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்கவும். அப்படியே பயன்படுத்த வேண்டி வந்தாலும் முழங்கையால் பொத்தான்களை தொடவும்
- படிகள், கைப்பிடிகள் ஆகியவற்றை தொடவேண்டாம். தொடவேண்டிய நிர்பந்தம் இருந்தால் சானிடைசர் வைத்து கைகளை கழுவவும்
- வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது முககவசம் அணியவும்
- கடைத்தெரு செல்லும் போது அதற்குரிய காலணிகளை அணியவும்
- வீட்டிற்கு வெளியில் இருக்கும் போது முகம், கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தொடவேண்டாம்.
- கடைத்தெரு செல்வதை முடிந்த அளவு குறைக்கவும்
- வெளியில் இருந்து வரும் போது கதவுகளை தொடுவதை தவிர்க்கவும். வீட்டில் இருப்பவர்கள் கதவை திறந்து விடுவது நல்லது.
- விருந்துக்கு செல்ல வேண்டாம். விருந்தினர்களை அழைக்கவேண்டாம். விழாக்களை தள்ளி வைக்கவும்
- தானியங்கி பணம் வழங்கி சென்ற பிறகும், ரூபாய் நோட்டுக்களை கையாளும் ஒவ்வொரு முறையும் கைகளை சோப்பு போட்டு கழுவவும்
- முடிந்த அளவு இணைய வழியாக கட்டணங்களை செலுத்தவும்
- வீட்டிற்கு வரும் மின்சாதன பழுது நீக்குபவர், மின்நுட்ப தொழிலாளி, நீர் குழாய் சீர் செய்பவர் ஆகியோர் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறுங்கள், அணிவதை உறுதி செய்யுங்கள்
- வெளியில் இருந்து வாங்கி வந்த பழங்களை, காய்கறி பொருட்களை கழுவுங்கள். பிற பொருட்கள் மீது கிருமி நாசினி பயன்படுத்துங்கள்
- வெளியில் செல்லும் போது கொண்டு செல்லும் பைகளை சூரிய வெளிச்சத்தில் வைக்கவும்
- வெளியில் இருந்து வந்தவுடன் கை / கால்களை கழுவும் குளிப்பது சிறந்தது
- வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைக்கவும்
- தரை மற்றும் சுவர்களில் கிருமி நாசினி தெளிக்கவும். 1 சதம் சோடியம் ஹைப்போக்ளோரைட் கரைசல் பயன்படுத்தலாம்
-
குழந்தைகள் குறித்து கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- பிற குழந்தைகளுடனும், பெரியவர்களுடனும் பழகும் போது சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
- கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தொடக்கூடாது என்றும், அடுத்தவர்களுடன் கை குலுக்குவதோ, கட்டிப்பிடிப்பதோ கூடாது என்றும் சொல்லிக்கொடுங்கள்
- விளையாட்டுப்பொருட்கள், புத்தகங்கள், வீட்டினுள் விளையாடுவது, கணினியில் விளையாடுவது, இணையவழி வகுப்புகள் என்று அவர்களை எதாவது செயலில் ஈடுபடுத்திக்கொண்டிருங்கள்
- பள்ளியில் இருந்து இணையவழியில் பாடம் எடுக்கும்போது அதில் ஈடுபாடுடன் கவனிக்கச்சொல்லுங்கள்
- அடிக்கடி சோப்பு வைத்து கை கழுவ சொல்லுங்கள். அதே போல் அவர்கள் பயன்படுத்தும் துண்டு போன்றவற்றை தனியாக வைத்திருக்கச்சொல்லுங்கள்
- வெளியில் சென்று விளையாடுவது, அல்லது குழுவாக இருப்பது ஆகியவற்றை தற்சமயம் ஊக்குவிக்க வேண்டாம்
- சுவர்கள், கைப்பிடிகள் ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும்