1990களில் இந்தியாவில் Hire and Fire நடைமுறை வந்தது. அதன் பிறகு Outsourcing / Contract (ஒப்பந்தப்பணி) ஆகியவை வந்தன
இதன் பின்னால் இருக்கும் முக்கிய காரணி – Technology அல்லது தொழிற்நுட்பம்
-oOo-
முன் காலங்களில் ஒரு வேலையை செய்ய நிறைய திறமை, நிறைய அனுபவம் தேவைப்பட்டது.
அல்லது / மற்றும்
நீண்ட கால அனுபவம் உள்ளவர் செய்வதற்கும், குறுகிய காலம் அனுபவம் உள்ளவர் செய்வதற்கும் வித்தியாசம் நிறைய இருந்தது
எனவே நீண்ட கால அனுபவம் உள்ளவர்கள் தேவைப்பட்டார்கள்.
ஆனால் தொழிற்நுட்பம் வளர வளர,
தேவைப்படும் அனுபவம் குறைந்தது
அல்லது / மற்றும்
நீண்ட கால அனுபவம் உள்ளவர் செய்வதற்கும், குறுகிய காலம் அனுபவம் உள்ளவர் செய்வதற்கும் வித்தியாசம் குறைந்தது
-oOo-
உதாரணமாக மருத்துவமனை மருந்தகத்தில்அந்த காலத்தில் Compounder என்று ஒருவர் இருந்தார். அப்பொழுது மருந்தகத்தில் (Pharmacy) மருந்துகள் செய்யப்பட்டன.
Mixtures, Lininment, Ointment, Cream எல்லாம் அங்கு செய்யப்பட்டன. எனவே அதற்கு அனுபவம் தேவை.
புதிதாக வருபவர் செய்யும் Ointment mixture போல் வரும் ரிஸ்க் இருப்பதால் நிறுவனங்கள் அனுபவம் மிக்க மருந்தாளுனர்களை இழக்க விரும்ப மாட்டார்கள். எனவே நிரந்திர பணி அளித்தார்கள்.
ஆனால் இன்று அனைத்தும் Blister pack, tubeகளில் வருகின்றன. எனவே மருந்தாளுனரின் வேலை என்பது செஷ்பில் இருந்து எடுத்து கொடுப்பது தான். எனவே பணி நிரந்தரம் இல்லை
அதே போல்
முன் காலங்களில் ஆய்வகங்கள் ஒவ்வொரு பரிசோதனையையும் தனியா செய்ய வேண்டும்
இப்பொழுது Semi Auto Analyser வந்து விட்டது. பல பரிசோதனைகள் Card Test / Rapid Kit ஆக வந்து விட்டன.
எனவே அனுபவத்தின் மதிப்பு குறைந்துள்ளது
-oOo-
மலேரியாவை கண்டு பிடிக்கும் ஆய்வக நுட்பனர் பணி என்பது நிரந்தர பணியாக உள்ளது. காரணம் இது அனுபவம் தேவைப்படும் வேலை
எய்ட்ஸ் சிகிச்சை பிரிவில் இருக்கும் ஆய்வக உதவியாளர் ஒப்பந்த பணியில் உள்ளார். இது சில நாட்கள் பயிற்சி பெற்றால் போதும்
-oOo-
ஒப்பந்த பணியால் வேறு பல பிரச்சனைகள் உள்ளன. அதை நான் முழுவதும் ஆதரிக்கவில்லை. அது வேறு விஷயம் – அது குறித்து தனியாக பேசலாம்
இங்கு கூறவரும் விஷயம் என்னவென்றால்
When technology has replaced your skill, you have lost your bargaining power
-oOo-
1990கள் வரை நிறுவனங்களின் இன்றியமையாத பங்காக தட்டச்சர்கள் இருந்தார்கள். ஏன் ? நிறைய கடிதங்களை விரைவாக அடிக்கவேண்டும். தவறில்லாமல் அடிக்கவேண்டும்
ஆனால் கணினி வந்த பிறகு தவறுகளை திருத்தும் வாய்ப்பு வந்த பிறகு “தவறில்லாமல் அடிப்பது” என்ற திறமைக்கு மதிப்பில்லை
-oOo-
சுவரில் படம் வரைபவர்களின் வேலையை போட்டோஷாப் + கோரல்டிரா + ப்ளெக்ஸ் பிரிண்டிங் பறித்தது
செயற்கை நுண்ணறிவு வந்து பழைய படத்தை சீரமைக்கும் திறமை சாலிகளின் வேலையை பறிக்கும். இந்த படத்தை பாருங்கள்.
(மூலம் : https://www.facebook.com/chithranraghu/posts/10227921004110055
மென்பொருள் : https://github.com/TencentARC/GFPGAN & https://replicate.com/xinntao/gfpgan)
2000களின் ஆரம்பம் முதல் இன்று வரை மிக அதிகமாக தேவைப்படும் ஒரு திறமை (பழைய படங்களை புதுப்பிற்பது) இனி பின்னால் சென்று விடும்
-oOo-
எனவே
நிரந்தர பணி x ஒப்பந்தப்பணி
குறித்த உரையாடல்களில்
உலகவங்கி, காட் என்று மட்டும் ஜல்லியடித்துவிட்டு
தொழிற்நுட்பத்தின் பங்கு குறித்து பேசவில்லை என்றால்
அது முழுமையாகாது
-oOo-
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் இருக்கும் தொழிற்சாலைகள் உருப்படுவதில்லை
காங்கிரஸ், திமுக தொழிற்சங்கங்கள் பலமாக இருக்கும் தொழிற்சாலைகள் தப்பிக்கின்றன
காரணம் என்ன தெரியுமா ?
-oOo-
இதற்கு செல்லவதற்கு முன்னர் இந்த கோப்பை வாசியுங்கள்
சிகிச்சையில் முக்கியம்
1. அந்த சிகிச்சை இருக்கவேண்டும்
2. அந்த சிகிச்சை நம் அருகில் இருக்கவேண்டும்
3. அந்த சிகிச்சை நம் அருகில், நம்மால் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும்
4. அந்த சிகிச்சை நம் அருகில், நம்மால் வாங்கக்கூடிய விலையில், தரத்துடன் இருக்கவேண்டும்
இதில் முதலில் தேவை – இருப்பது
அடுத்த முக்கியம் – அருகில் இருப்பது
அடுத்த முக்கியம் – வாங்கும் விலையில் இருப்பது
அடுத்த முக்கியம் – தரமாக இருப்பது
மிக அதிகமான தரமாக உள்ளது, ஆனால் வாங்கும் விலையில் இல்லை என்றால் பலனில்லை
மிக அதிகமான தரமாக உள்ளது, ஆனால் அருகில் இல்லை என்றால் பலனில்லை
எனவே எப்பொழுதும் Order of Priority முக்கியம்
-oOo-
ஊதியம் அவசியம்
அதை விட தொழிலாளர் நலன் அவசியம்
இவர் இரண்டும் எப்பொழுது அவசியம் ?
அந்த தொழிலாளி வேலையில் இருந்தால் தானே இவை இரண்டிற்கும் அர்த்தம் உண்டு
வேலையில் இல்லை என்றால் அதிக ஊதியம் என்ற கோரிக்கையால் ஏதாவது பலன் உண்டா ?
தொழிலாளி வேலையில் இருக்கவேண்டும் என்றால் எது அவசியம் ?
தொழிலாளி வேலையில் இருக்கவேண்டும் என்றால் அந்த தொழிற்சாலை, நிறுவனம் இயங்கவேண்டும்
எனவே
முதல் தேவை – தொழிற்சாலை இயங்கவேண்டும்
அடுத்த தேவை – நமக்கு (தொழிலாளிக்கு) வேலை வேண்டும்
அடுத்த தேவை – நமது அடிப்படை உரிமை + பாதுகாப்பு வேண்டும்
அடுத்த தேவை – ஊதிய உயர்வு வேண்டும்
-oOo-
காங்கிரஸ், திமுக தொழிற்சங்கங்கள் இந்த கருத்தில் தெளிவாக இருப்பார்கள்
ஊழியரின் உடல் நலத்திற்கோ, உயிருக்கு ஆபத்து என்ற நிலை எற்பட்டால் தவிர அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு படமாட்டார்கள்
மீதி பிரச்சனைகளை ”பேசியே தீர்த்துக்கொள்வார்கள்”
லாக் அவுட் போன்ற விஷயங்களினால் தொழிற்சாலைக்கு நஷ்டம் என்றால் அது ஊழியர்களை பாதிக்கும் என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள்
-oOo-
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை பொருத்தவரை
அவர்களுக்கு போராட்டம் தேவை
அதனால் ஊழியருக்கு வேலை போனாலும் பரவாயில்லை (விடுங்க பாஸ், கோர்ட்டில் போய் வாங்கிக்கலாம்)
அதனால் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டாலும் பரவாயில்லை (விடுங்க பாஸ், லேபர் டிபார்ட்மெண்டில் பேசி செட்டில்மெண்ட் வாங்கலாம்)
என்று தான் இவர்களின் செயல்பாடு இருக்குமே தவிர
அவர்கள் சங்கம் வளர்ப்பது தான் அவர்களின் நோக்கமாக இருக்கும் தவிர
ஊழியர் நலன் துளியும் இருக்காது
இது தான் என் அனுபவம்
-oOo-
ஆமை புகுந்த வீடும்
கம்யூனிஸ்ட் புகுந்த தொழிற்சாலையும்
உருப்பட்டதாக சரித்திரமே இல்லை
சித்த மருத்துவத்தால் உயிரை காக்க முடியாது
எந்த நோயையும் குணப்படுத்த முடியாது
நவீன மருத்துவம் மட்டுமே உயிர் காக்கும்
என்பதால் நவீன மருத்துவத்தை பயன்படுத்துகிறார்கள்
இதில் என்ன பிழை
நோயாளி நலம் பெற வேண்டும் என்பது தானே முக்கியம்
எந்த முறை என்பதா முக்கியம் ?
சித்த மருத்துவக்கல்லூரிகளிலும் நவீன மருத்துவத்தை சொல்லி கொடுப்பதன் மூலம் இதற்கு எளிய தீர்வு உண்டே
வைத்தியம் பார்ப்பது நவீன மருந்துகளை வைத்து என்றால்
ஏன் சித்த மருத்துவக்கல்லூரி நமக்கு தேவை ?
அடுத்த மாதம் திறக்கும் 11 கல்லூரிகளுடன் சித்த கல்லூரிகளையும் நவீன மருத்துவக்கல்லூரிகளாக மாற்றலாமே
ஒருவருக்கு பைல்ஸ் பிரச்சனை அல்லது சிறுநீரக கோளாறு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது அவர் வைத்தியம் செய்து கொள்ள நிறைய இடங்கள் உள்ளன
1. அரசு மருத்துவமனையில் – இலவசமாக
2. தனியார் மருத்துவமனையில் – காசு கட்டி
3. தனியார் மருத்துவமனையில் – காப்பீடு மூலம் (அதாவது ஏற்கனவே காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தால்)
எந்த மருத்துவமனை செல்வது என்பதை தீர்மானிக்க அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நேரம் உள்ளது.
அவர் தனியார் மருத்துவமனையில் சேர்கிறார் என்றால், அவர் பணம் கட்டுவார் அல்லது அவரது காப்பீடு திட்டத்தை வைத்து அந்த மருத்துவமனை காப்பீடு நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பார்கள். அப்படி விண்ணப்பித்தவுடன், அந்த நிறுவனம் அதை அங்கீகரிக்கும். அதை வைத்து சிகிச்சை துவங்கும்
அவசரமில்லாத சிகிச்சைகளுக்கு இந்த பிரச்சனை இல்லை ஆனால் விபத்துக்களில் சிக்கல் உள்ளது
-oOo-
அடி சிறிது என்றால் – சிராய்ப்பு மட்டும் தான் என்றால்- முதலுதவி சிறிது தான், சிகிச்சையும் சிறிது தான்.
ஆனால் அடி பலம் என்றால் – தலைக்காயம் அல்லது விலா எலும்பு முறிவு, கை கால் எலும்பு முறிவு என்றால்- முதலுதவியும் அதிகம், சிகிச்சையும் அதிகம்.
உதாரணமாக,
சிராய்ப்பு என்றால் முதலுதவிக்கு 100 ரூபாய் ஆகும். மொத்த வைத்தியம் ரூ500 முதல் ரூ1000 வரை ஆகும்.
கை எலும்பு முறிவு என்றால் முதலுதவிக்கு 1000 ரூபாய் ஆகும். மொத்த வைத்தியம் ரூ10000-ரூ30000 வரை ஆகலாம்.
கால் எலும்பு முறிவு என்றால் முதலுதவிக்கு 10000 ரூபாய் ஆகும். மொத்த வைத்தியம் ரூ1 லட்சம் – ரூ2 லட்சம் வரை ஆகலாம்.
தலைக்காயம் / முதுகு எலும்பு முறிவு என்றால் முதலுதவிக்கே ரூ1 லட்சம் ஆகும். மொத்த கட்டணம் ரூ3 லட்சம் முதல் ரூ10 லட்சம் ஆகலாம்
இது புரிந்து கொள்ளத்தான். சரியான கட்டணம் என்பது நபருக்கு நபர் மாறுபடும்.
-oOo-
முதலுதவிக்கு 1 லட்சமா என்று கேள்வி எழுகிறதா ?
1980களில் முதலுதவி என்பது கட்டு போடுவது + வலிக்கு மாத்திரை அளிப்பது மட்டுமே. 1980களில் முதலுதவி என்பதை ஒரு சிறிய பெட்டிக்குள் அடக்கி விடலாம்
2021ல் முதலுதவி என்பதே பெரிதாகிவிட்டது
Philadelphia Collar / Spine Board / Pelvic Binders / Splints
Suction / OP Airway / NP Airway / Intubation / Tracheostomy
Ventilatory Suppor
Venflon / Central Line
Stat Lab
Volume Replacement Blood Transfusion
X Ray / eFast / CT / MRI
ICD / Pericardiocentesis
எனவே இன்றைய தேதிக்கு
உண்மையான முதலுதவி என்பது விபத்தின் தன்மையை பொருத்து 10 ரூபாயில் இருந்து (சிராய்ப்பு என்றால்) ரூ1 லட்சம் வரை (தலைக்காயம் + எலும்பு முறிவு + நுரையீரல் பாதிப்பு) ஆகும்.
-oOo-
சும்மா ஒரு கட்டு போட்டுவிட்டு, டிடி ஊசி போடுவது என்றால் 100 ரூபாய் செலவு. ஆனால் உண்மையில் உயிரை காக்க வேண்டும் என்றால் 1 லட்சம் செலவு.
சும்மா ஒரு கட்டு போட்டுவிட்டு, டிடி ஊசி போடுவது என்றால் 10 நிமிடம் தான் ஆகும். ஆனால் உண்மையில் உயிரை காக்க வேண்டும் என்றால் 6 மணி நேரம் வரை ஆகலாம்.
-oOo-
அந்த காலத்தில் எல்லாம் அடிபட்டால் 10 ரூபாய் தான் செலவு. இப்ப 1 லட்சமா, ஹாஸ்பிட்டல் எல்லாம் கொள்ளையடிக்கிறாங்க என்று புலம்புகிறீர்களா ?
சற்றுப் பொறுங்கள்.
விபத்தினால் நேரும் மரணங்களை கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.
(1) முதல் வகை: மூளை, இதயம், மகாதமணி, முதுகுத்தண்டு ஆகியவை கிழிபடுவதால் ஏற்படும் உடனடி மரணம் – இது அடிபட்ட சில நொடிகளில் இருந்து 10 நிமிடங்களுக்குள் ஏற்படும். இதில் உயிரை காக்க வாய்ப்பு குறைவு. விபத்தை தடுப்பதன் மூலமே இதை தடுக்க முடியும்.
(2) இரண்டாம் வகை : மண்டக்குள் இரத்தக்கட்டு, நுரையீரலை சுற்றி இரத்தம் கட்டுவது, இதயத்தை சுற்றி இரத்தம் கட்டுவது, இரத்தப்போக்கு, மூச்சுத் திணறல் ஆகியவற்றால் ஏற்படும் மரணங்கள். இவை 10 நிமிடங்களில் இருந்து 2-3 நாட்களுக்குள் ஏற்படும். ஆனால் அடிபட்ட உடனே, அடிபட்ட 1 மணி நேரத்திற்குள் சிகிச்சையை அளிப்பதன் மூலம் இவர்களின் உயிரை காக்க முடியும்.
(3) மூன்றால் வகை : பிற அடிகள்.
-oOo-
1980களில் முதலுதவி என்பது கட்டு போடுவது + வலிக்கு மாத்திரை அளிப்பது மட்டுமே. 1980களில் முதலுதவி என்பதை ஒரு சிறிய பெட்டிக்குள் அடக்கி விடலாம். காரணம் அன்றைய காலக்கட்டத்தில் நாம் மூன்றாம் வகை அடிகளுக்கு மட்டும் தான் முதலுதவி செய்து வந்தோம்.
அன்றைய காலக்கட்டத்தில்
மண்டைக்குள் இரத்தக்கட்டு, நுரையீரலை சுற்றி இரத்தம் கட்டுவது, இதயத்தை சுற்றி இரத்தம் கட்டுவது, இரத்தப்போக்கு, மூச்சு திணறல் ஏற்பட்டால் மரணம் தான்.
அதாவது 1980களை பொருத்தவரை,
முதல் வகை + இரண்டாம் வகை இரண்டுமே ஸ்பாட் அவுட் தான்
ஆனால் 2021ல் நவீன அறிவியல் மருத்துவம் வளர்ந்த பிறகு இரண்டாம் வகைக்கு சிகிச்சை வந்துள்ளது. அதன் மூலம் உயிரை காக்க முடிகிறது. ஆனால் இதற்கு ரூ3 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆகிறது. இந்த முதலுதவிக்கே ரூ1 லட்சம் ஆகிறது
அந்த காலத்தில் அடி பட்டு “ஸ்பாட் அவுட்” என்று கணக்கில் வந்தவர்களில் பாதி பேரை காக்க முதலுதவிக்கே 1 லட்சம் ஆகிறது.
அதாவது 10 ரூபாய் கட்டு போதுவது 1 லட்சம் ஆகவில்லை, புதிதாக 1 லட்சத்திற்கு சிகிச்சை வந்துள்ளது.
-oOo-
ஒருவர் சாலையில் செல்லும் போது விபத்துக்காகிறார் என்றால், அவர் கையில் 1 லட்சம் இருந்தால் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.
அவர் கையில் காசு இல்லை என்றால் அந்த தனியார் மருத்துவமனைக்கு யார் காசு கொடுப்பார்கள்?
அவர் கையில் காசு இல்லை, ஆனால் அவரிடம் காப்பீடு உள்ளது. அந்த காப்பீடு எண் கையில் இல்லை. அந்த தனியார் மருத்துவமனைக்கு யார் காசு கொடுப்பார்கள்?
இது தான் இன்று வரை இருந்த நடைமுறைச் சிக்கல்.
-oOo-
உதாரணமாக
ஒருவருக்கு விபத்தில் கை எலும்பு முறிந்துள்ளது, இது வரை 108 அம்புலன்ஸ்
அவரிடம் பணம் இருக்கிறதா?, காப்பீடு உள்ளதா?, உறவினர்களால் பணம் செலுத்த முடியுமா? என்ற எந்த கேள்வியும் கேட்காமல்
அவரை அரசு மருத்துவமனைக்குத்தான் அழைத்து செல்லும். அங்கு சென்று அவருக்கு முதலுதவி செய்யப்படும்.
பிறகு உறவினர்கள் எல்லாம் வந்த பிறகு
1. அவர்களிடம் காசு இல்லை என்றால் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தொடரலாம்.
2. அவர்களிடம் காசு அல்லது காப்பீடு இருந்தால் வேறு தனியார் மருத்துவமனை செல்லலாம்.
-oOo-
உதாரணமாக,
ஒருவருக்கு விபத்தில் கை எலும்பு முறிந்துள்ளது
அவரிடம் பணம் உள்ளது.
அவர் தனியார் மருத்துவமனை தான் செல்வேன் என்று சொன்னால் அம்புலன்ஸ் அவரை அங்கு அழைத்து செல்வார்கள்.
-oOo-
உதாரணமாக,
ஒருவருக்கு விபத்தில் தலையில் அடிபட்டு மயக்கமாகியுள்ளார். அவர் யார் என்றே தெரியாது. இது வரை 108 அம்புலன்ஸ்
அவரை அரசு மருத்துவமனைக்குத்தான் அழைத்து செல்லும். அங்கு சென்று அவருக்கு முதலுதவி செய்யப்படும்.
பிறகு உறவினர்கள் எல்லாம் வந்த பிறகு
1. அவர்களிடம் காசு இல்லை என்றால் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தொடரலாம்.
2. அவர்களிடம் காசு அல்லது காப்பீடு இருந்தால் வேறு தனியார் மருத்துவமனை செல்லலாம்.
-oOo-
இப்பொழுது தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டம் என்ன?
முழுசிகிச்சையில் முதலுதவி பகுதியை மட்டும் தனியாக பிரித்து அந்த முதலுதவிக்கு தமிழக அரசு பணம் கொடுக்கும் என்பது தான்.
இந்த திட்டத்தின் மூலம்
விபத்தில் அடிபட்டவரை அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.
அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லலாம். முதலுதவிக்கு அரசு பணம் கொடுக்கும் என்பதால்
மருத்துவமனையும் பணம் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையை துவங்குவார்கள். அவருக்கு முதலுதவி சீக்கிரம் கிடைக்கும்.
பிறகு அவரது உறவினர்கள் வந்த பிறகு அவர்கள் ஆற அமர முடிவு செய்து (இரண்டு நாட்களுக்குள்)
1. காசு அல்லது காப்பீடு இல்லை என்றால் அரசு மருத்துவமனைக்கு வரலாம்
2. காசு அல்லது காப்பீடு உள்ளது என்றால் அதே மருத்துவமனையில் தொடரலாம்
3. காசு அல்லது காப்பீடு உள்ளது என்றால் வேறு தனியார் மருத்துவமனை செல்லலாம்
-oOo-
இதனால் என்ன பலன்?
1. அடிபட்டவருக்கு : உதவி சீக்கிரம் கிடைக்கும். எனவே உயிரை காக்க வாய்ப்பு அதிகம். கை கால் ஆகியவற்றில் அடி பட்டிருந்தால் அந்த உறுப்புகளை காக்கவும் வாய்ப்பு அதிகம்.
2. உறவினர்களுக்கு : ஒருவர் விபத்தில் அடிபட்டார் என்பது அதிர்ச்சி தரும் செய்தி. அந்த நிலையில் அதே மருத்துவமனையில் தொடர்வதா, வேறு எங்கும் செல்வதா, எவ்வளவு காசு ஆகும், கையில் காசு உள்ளதா, கடன் வாங்குவதா, நகையை அடமானம் வைப்பதா என்ற முடிவு எடுக்கவேண்டாம்.
3. தனியார் மருத்துவமனைக்கு: அந்த நபர் அதே மருத்துவமனையில் சிகிச்சையை தொடர்ந்தால், அவர்களுக்கு வருமானம்.
4. அரசிற்கு : மக்களின் உயிரை காக்க முடியும்.
-oOo-
சும்மா இருப்பவர்களை கூட தனியார் மருத்துவமனைகள் பெரிய அடி இருப்பதாக காண்பித்து அதிக கட்டணம் வாங்க முடியுமா ?
முடியாது.
(1) 108 அம்புலன்ஸ்சில் ஒருவர் ஏறும் போதே அவரது உடல்நிலை என்ன என்பது குறித்து அவர்கள் பதிந்துவிடுவார்கள். அதை வைத்தே அவரின் முதலுதவிக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை சொல்லிவிடலாம்.
(2) விபத்து நடந்த பிறகு காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவார்கள். அதிலும் காயங்களின் தன்மை இருக்கும்.
எனவே இந்த இரண்டையும் வைத்து
இது 100 ரூபாய் முதலுதவியா, (சிராய்ப்பா) 1000 ரூபாய் முதலுதவியா, (கை எலும்பு முறிவா) 10000 ரூபாய் முதலுதவியா, (தொடை எலும்பு முறிவா) அல்லது 1 லட்சம் முதலுதவியா (தலைக்காயம், வயிறு கிழிந்துவிடுவது) என்பதை எளிதில் கண்டு கொள்ளலாம்.
-oOo-
“காவல்துறையும் மருத்துவமனையும் சேர்ந்து ஊழல் செய்வார்கள், எனவே இந்த திட்டத்தை எதிர்க்கிறேன்” என்று கூறுகிறீர்கள் என்றால் avada kedavra என்பதை தவிர சொல்ல எதுவும் இல்லை.
மேலும் அறிந்து கொள்ள இந்த காணொளியை பார்க்கலாம்
மருத்துவம் தொடர்பாக மூத்த எலும்பியல் மருத்துவர் லோகநாதன் சார் அவர்களின் பிற காணொளிகளை இங்கு காணலாம்
IKT – 48 மணி நேரம் நம்மைக்காக்கும் இன்னுயிர் காப்போம் திட்டம்
Creating Emergency Care Fund (IKT Fund)
50 Cr Assurance Mode
Fix ceiling of up to Rs. 1 lakh per individual
Empanelment of Government and Private Hospitals – 609
Integrate the 48 hour cashless scheme with the existing CMCHIS scheme after 48 hours
Selection of 81 Appropriate Packages
IKT Empanelled 609 Hospitals
Government Hospitals
Private Hospitals
Level 1 Hospitals
20
30
50
Level 2 Hospitals
74
157
231
Level 3 Hospitals
121
207
328
215
394
609
The Scope of coverage
If a patient needs admission and minor procedure (listed) which does not exceed 48 hours stay the same may be done at the hospital he/she is being admitted.
If the patient is not stable or requires procedures that may need Hospitalisation beyond 48 hours one of the following conditions may apply.
Stabilization of the patient and Discharge to any empanelled Hospital if the patient needs further treatment which is covered under Chief Minister’s Comprehensive Health Insurance Scheme and is eligible for Coverage.
Stabilization of the patient and Discharge to Government Hospital if the patient needs further treatment but the treatment is not covered under Chief Minister’s Comprehensive Health Insurance Scheme or eligible for Coverage.
Stabilization of the patient and continuation of treatment in same Hospital or any other hospital of his / her choosing if the patient is not willing for transfer to Government Hospital (or) has private Insurance (or) willing to continue treatment as a paid patient.
IKT – Categories of patients who will benefit under NK – 48
All accident victims on road within TN border including tourists from other states and foreigners
Accident victims brought by Good Samaritans
Accident victims brought by family
Accident victims who come by themselves
Unknown accident victim brought by police, or Good Samaritans
Mass casualty accident victims
IKT – NK 48 Exclusion criteria
Assault injuries
Domestic injuries
Fall from height
Injuries due to fall of heavy object
Train traffic accident injuries
Animal bites, Self harm
Occupational work place injuries
Thermal /Chemical/ Burn Injuries
Cracker Blast Injuries
5 Steps of Emergency Trauma Care
Prehospital Triage & Transportation by Ambulance along with in-transit care
Resuscitation & Stabilization in hospital Emergency Department
Damage Control Surgeries
Definitive Care
Rehabilitation
Step 1,2,3 – IKT
Steps 4,5 – KKT – CMCHIS
NK 48 Guideline
On receipt of information from the accident site, Life support ambulance with trained manpower will reach the spot, Triaging & basic resuscitation (cABC) will be done by EMT.
Patients maybe entitled for free treatment upto 48 hours in hospitals of IK – NK 48 Scheme empanelled private hospitals of neighbouring states if the accident occurs within Tamil Nadu but close to the state border.
NK 48 Guideline
5 Levels of triaging at the Accident Scene for guiding the EMT
Pre-hospital Triage & Acuity Scale
Description of the Acuity Scale
Equivalent Triage category
Level 1 – Resuscitation
Patient battling for life in need of resuscitation/Severe hemodynamic compromise/Shock/Traumatic amputation of an extremity
Red
Level 2 – Emergent
Seriously injured patient who requires rapid medical intervention/Penetrating head,chest or abdominal injury/Neurovascular compromise of an extremity
Red
Level 3 – Urgent
Patient with stable vitals, but the presenting problem suggests further evaluation
Minor contusions, abrasions, lacerations not requiring closure, Non urgent with minor complaint
Green
RTA – Patient comes to any Hospital
IK NK 48 Basic Trauma Package for any RTA Patient – Clinical examination ,Hb, Urea, Sugar,ECG,X –Ray Chest. Patient is stable. He will be discharge (Green Category)
Patient in Red / Yellow category
CMCHIS Card Holder(Upto 48 hours) IK – NK48 Empaneled Hospital
Treatment under IK – NK 48 Packages
CMCHIS Non Card Holder / other state / Foreign RTA victims (Upto 48 hours) IK – NK48 Empaneled Hospital
Treatment under IK – NK48 Packages
Packages applicable only Upto 48 Hours in the NK 48 empanelled 609 hospitals only. IFT Can be done within 48 hours based on the triage only among the NK 48 empanelled 609 hospitals
Treatment will be continued under CMCHIS as per existing packages
Non CMCHIS Card holder ( Govt / Pvt empanelled Hospitals under CMCHIS)
Treatment will be continued under free category in Govt Hospitals
Treatment will be continued under payment / pvt insurance by the patient in pvt hospitals
Other state / foreign RTA victims
Treatment will be continued under free category in Govt Hospitals
Treatment will be continued under payment / pvt insurance / PM-JAY by the patient in pvt hospitals
NK 48 Guideline
Critically ill (Red category) patient to be taken by 108 Ambulance service to the nearest empanelled Level 1 Hospital if located within 20-30km.
The Level 1 Hospital may be a Government Hospital or a private facility.
The patient should be transported in the shortest period to ensure advanced trauma life support.
If it is far, the patient should be stabilized in the nearest L2 or L3 hospital and through 108 ambulance should move the patient after stabilization to the L1 facility for definitive intervention.
2 hr mandatory resuscitation for a critically injured patient before any Inter-facility Transfer.
IFT with Pre-Arrival Intimation to the receiving hospital.
Time Norms in Emergency Care of RTA patients
NK 48 Guideline – Preauth & Claim
EI number should be obtained by the treating hospital, & the URN should be shared even with IFT(Inter facility transfer) Hospital till the treatment course is completed under IKT.
When treatment involves more than 1 hospital, the treatment time will be from the time of admission in the 1st hospital (upto 48 hours only).
NK 48 Guideline – Preauth
Pre-auth submission by Hospital
Within 4 hours of admission during 8 am to 6 pm.
Within 12 hours of admission during 6 pm to 8 am
PREAUTH CRITERIA
Any Identification Card.
If there is no Identity Card, a letter from Hospital to be submitted.
Patient’s Clinical Photo.
Preliminary Assessment Report duly certified by examining Doctor.
AR copy with treating Doctor’s sign.
If the patient needs additional treatment or procedure, Enhancement request may be applied with Secondary Survey report.
CLAIMS CRITERIA
Treatment Summary, Discharge Summary / Referral Letter/ Death Summary within 5 days from the date of admission.
Declaration that no money has been collected from the patient during the course of treatment
CMCHIS URN if available.
All investigations done, with Images.
Operative notes and Case sheet.
Hospital Bills (detailed).
IKT – NK 48 Claims
Claims settlement for NK 48 within 3 days from Claim submission.
CMCHIS call center will make telephonic enquiry on the patient status and keep a record.
Any Death within 1 month of major accident should be reported with PM report for record maintenance.
NK 48 Guideline
Strict follow-up and bench marking of hospitals as per TAEI standards.
Frequent Audits for quality of care
List of Packages
S.NO
Package Name
Rate (in Rs.)
1
TA001 : Central line
4000
2
TA002 : Intraosseous line
4000
3
TA003 : Cervical Collar (philadelphia)
1500
4
TA004 : Endotracheal Intubation
2000
5
TA005 : Tracheostomy
10000
6
TA006 : Oropharngeal Airway
2000
7
TA007 : Blood and Blood Component Transfusion
2000
TA007a : Blood and Blood Component Transfusion – additional uit