ரு ரூ ௫ ௹ ஆகியவை நான்கிற்கும் தமிழில், ஒருங்குறியில் தனித்தனி குறியீடுகள் உள்ளன

ரு

ரு ரூ ௫ ௹ ஆகியவை நான்கிற்கும் தமிழில், ஒருங்குறியில் தனித்தனி குறியீடுகள் உள்ளன

ரூ

ஆகியவை நான்கிற்கும் தமிழில், ஒருங்குறியில் தனித்தனி குறியீடுகள் உள்ளன

ரு என்பது தமிழ் உயிர்மெய் எழுத்து ரு. அதாவது ர் + உ

ரூ என்பது தமிழ் உயிர்மெய் எழுத்து ரூ. அதாவது ர் + ஊ

௫ என்பது தமிழ் எண் 5

௦ (0) சுழியம்
௧ (1) ஒன்று
௨ (2) இரண்டு
௩ (3) மூன்று
௪ (4) நான்கு
௫ (5) ஐந்து
௬ (6) ஆறு
௭ (7) ஏழு
௮ (8) எட்டு
௯ (9) ஒன்பது
௰ (10) பத்து

௱ (100) நூறு
௲ (1,000) ஆயிரம்
௱௲ (100,000) நூறாயிரம் / இலட்சம்
௲௲ (1 million) மெய்யிரம் / பத்து இலட்சம்
௲௲௲ (1 trillion) தொள்ளுண் / நிகர்ப்புதம்

இதில் க என்பதும் ௧ (1) என்பதும் வேறு எழுத்துக்கள்.
உ வேறு ௨ (2) வேறு.
எ வேறு ௭ (7) வேறு
அ வேறு ௮ (8) வேறு

இவை அனைத்தும் ஒருங்குறியில் உள்ளன. உங்கள் ஆப்பிள் மற்றும் ஆண்டிராய்ட் அலைபேசியிலேயே தெளிவாக தெரியும்

௹ என்பது ரூபாய்க்கான குறியீடு. ரூபாய் என்பதை தமிழ் இலக்கணப்படி (எசுபானியா, உருசியா, இரத்தம் போல்) உரூபாய் என்று தான் எழுதவேண்டும் என்பதால் உ + ரூ ஆகியவற்றை சேர்த்து அந்த ‘உ’வை ‘ரு’வின் மேல் வைத்து ௹ என்று பல நூற்றாண்டுகளாக எழுதிவருகிறார்கள்

தட்டச்சு வருவதற்கு முன் கையால் எழுதப்பட்ட
பழைய பத்திரங்களில் இந்த எழுத்தை நீங்கள் பார்க்கலாம்

(பழைய தமிழ் பத்திரங்களில் உள்ள மற்றொரு எழுத்து ௸ – இதை மேற்படி என்று வாசிக்கவேண்டும்)