The Following are the list of books I have authored. Click the Title to Buy them. More details about the books below the table. இது என் நூல்களின் பட்டியல். நூலில் பெயரை சுட்டினால் நீங்கள் அதை வாங்க முடியும். மேலும் விபரங்கள் இந்த அட்டவணைக்கு கீழ் உள்ளன
S.No | Title. | Language | Genre |
1 | பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும்: Science and Psychology of Paleo Diet | தமிழ்
|
அபுனைவு
அறிவியல் மருத்துவம் உணவு |
2 | 1615 ஒரு காதல் கதை Khusrau குஸ்ரூ | தமிழ்
|
அபுனைவு
வரலாறு |
3 | ஆர்கானிக் யூஜெனிக்ஸ்: செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும் (Artificial Intelligence and Natural Stupidity : Organic Eugenics) | தமிழ் | புனைவு
|
4 | Artificial Intelligence and Natural Stupidity – Organic Eugenics (To Buy in Amazon.com, click this link) | English | Fiction |
5 | புருனோவின் பயணங்கள் : பாகம் 1 Payanangal : Bruno’s Tamil Blog Part I | தமிழ் | கட்டுரைகள் |
6 | தர்மாஸ்பத்திரி (அரசு மருத்துவமனை) ஊசி: GH (Government Hospital) Injections | தமிழ் | கட்டுரைகள் |
7 | தேயும் நடுத்தர வர்க்கம் அதிகரிக்கும் கடன்கள் : Waning Middle Class and Waxing Debts: | தமிழ் | அபுனைவு
பொருளாதாரம் |
8 | எனக்கொரு சைட் வேண்டுமடா: சொந்த இணையதளம் குறித்த அறிமுகக்குறிப்புகள் | தமிழ் | அபுனைவு இணையம் வலைத்தளம் வலைப்பூ சமூக ஊடகம் |
9 | HTTP 417 : Indian Healthcare IT Start-up’s Guide | English | Non Fiction Startup Health IT MedTech Health Care |
10 | பன்றிக் காய்ச்சல் | தமிழ் | அபுனைவு
அறிவியல் மருத்துவம் |
11 | சுற்றுச்சூழலிய தீவிரவாதம் மற்றும் சுற்றுச்சூழலிய பயங்கரவாதம்: Environmental Extremism & Environmental Terrorism (Tamil Edition) | தமிழ் | அபுனைவு
அறிவியல் சுற்றுச்சூழல் |
10 | மஞ்சள் காமாலைக்கு நாட்டு வைத்தியம் | தமிழ் | அபுனைவு
அறிவியல் மருத்துவம் |
51 | TargetPG TNPSC 3rd Edition 1995 to 2009
· TargetPG TNPSC 1st Edition 1995 to 2003 · TargetPG TNPSC 2nd Edition 1995 to 2007 |
English | Exam Preparation |
52 | TargetPG TNPSC Interview Buster | English | Exam Preparation |
53 | TargetPG TNPG 2002 to 2006 | English | Exam Preparation |
54 | Firstest Orthopaedics | English | Exam Preparation |
55 | Zulfi Raj’s Pre PG Medicine Handbook : 4th Edition
· Zulfi Raj’s Pre PG Medicine Handbook : 3rd Edition |
English | Exam Preparation |
56 | RxPG TargetPG All India 2004 | English | Exam Preparation |
57 | RxPG TargetPG All India 2005 | English | Exam Preparation |
58 | RxPG TargetPG All India 2006 | English | Exam Preparation |
59 | RxPG TargetPG All India 2008 | English | Exam Preparation |
- பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும்: Science and Psychology of Paleo Diet
அமேசான் “பென் டு பப்ளிஷ் 2019” போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல் (Winner of the 2019 Kindle PentoPublish Contest conducted by Amazon). தவறான உணவு பழக்கம் மூலம் உடற்பருமன், நீரிழிவு, தைராய்டு பிரச்சனை, ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஆகியவை எப்படி ஏற்படுகிறது என்றும் அவற்றை சரியான உணவின் மூலம் அறிவியல் அடிப்படையில் எப்படி சரி செய்யலாம் என்றும் தமிழில் விளக்கும் நூல். இந்த நூலை மட்டும் படித்து விட்டு, நீங்கள் குறைமாவு உணவை உட்கொள்ளவோ, பரிந்துரைக்கவோ முடியாது. “30 நாட்களில் பேலியோ” என்ற எதிர்ப்பாப்பில் இதை தயவு செய்து வாசிக்காதீர்கள். மருத்துவர்களை பொறுத்த வரையில் மருத்துவக்கல்லூரில் முதலாம் ஆண்டும் முதல் இறுதியாண்டு வரை நீங்கள் ஏற்கனவே வாசித்த, கற்றுக்கொண்ட விஷயங்கள் பலவற்றை இணைத்து உங்களை இயல்பாக சிந்திக்கத்தூண்டும் ஒரு இழையாகத்தான் இந்த நூல் இருக்கும். மருத்துவரல்லாதவர்களைப் பொருத்தவரை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் குறைமாவு உணவினை எந்த தயக்கமும் இல்லாமல் சாப்பிட இங்கு கூறப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு உதவும். நூலை வாங்க இங்கு செல்லவும்
- 1615 ஒரு காதல் கதை Khusrau குஸ்ரூ A Love Story
முகலாய இளவரசர், ஜஹாங்கீரின் புதல்வர், ஷாஜஹானின் சகோதரர் குஸ்ரூவின் கதை. Story of Khusrau, Son of Jahangir and Brother of Shajahan . காதலுக்காக அரச பதவியை துறந்தவர்கள் பலர் உள்ளனர். காதலுக்காக உயிரை விட்டவர்கள் பலர் உள்ளனர். காதலுக்காக பதவி, உயிர், இரண்டையும் துச்சமென மதித்த குஸ்ரூவின் கதை இது. மேன்மை, வீரம், துரோகம், சோகம் என்று அனைத்தும் கலந்தது தான் குஸ்ரூவின் வாழ்க்கை. அதில் பரிசுத்தமான காதலிற்கும் இடமுண்டு. ஆனால் பாபர், ஹூமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் என்ற 6 முக்கிய முகலாய மன்னர்களின் வரிசையில் சரித்திரம் குஸ்ரூவிற்கு இடமளிக்க வில்லை. அவரால் ஒரு நாள் கூட முகலாய ஆட்சிபீடத்தில் அமர முடியவில்லை. ஆனால் அவரது காலத்தில் மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். இந்த கதையை படித்த பின்னர் உங்களின் மனதில் கூட இடம்பிடிக்கலாம். நூலை வாங்க இங்கு செல்லவும்
- ஆர்கானிக் யூஜெனிக்ஸ்: செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும் (Artificial Intelligence and Natural Stupidity : Organic Eugenics): புனைவு – சிறுகதை
இயற்கை விவசாயம், வீகனிசம், தடுப்பூசி எதிர்ப்பு, வீட்டில் பிரசவம், நவீன மருத்துவம் குறித்த அவதூறு, சிக்கன் சாப்பிட்டால் கெடுதி என்ற செய்தி எல்லாம் தற்செயலா, அல்லது யாராவது திட்டமிட்டு பரப்புகிறார்களா என்பது குறித்தம் மாற்று மருத்துவம், இயற்கை விவசாயம் ஆகியவற்றால் மனித குலத்திற்கு நன்மையா, தீமையா என்பது குறித்தம் உரையாடலை துவக்க ஒரு முயற்சி இந்த சிறுகதை. யூடுயுப், முகநூல் ஆகிய தளங்களின் செயற்கை நுண்ணறிவு எப்படி வேலை செய்கிறது என்றும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. நூலை வாங்க இங்கு செல்லவும். இந்த கதை ஆங்கிலத்திலும் உள்ளது
- Artificial Intelligence and Natural Stupidity – Organic Eugenics
This is a short story aimed at finding the answer to a simple question. Are the various messages you get about “Organic Farming”, “Veganism”, “So Called Alternative Medicine @ SCAM”, Modern Medicine in General and Vaccines in Particular are merely a result of some one with low IQ and High Enthusiam getting a Smartphone and Net Connectivity or Is there a planned movement behind those ? The short Story also explains the Artificial Algorithm in Youtube and Facebook and the methods by which these sites and apps make you spend more time with them. This was originally written in Tamil by me and then in English. Book can be Bought in Amazon.in, Amazon.com as well as in Google Books
- புருனோவின் பயணங்கள் : பாகம் 1 Payanangal : Bruno’s Tamil Blog Part I
தமிழ்மணம் திரட்டியில் வாரம் ஒரு பதிவரை விண்மீன் பதிவர் (நட்சத்திர பதிவர்) என்று குறித்து அவரது பதிவுகளை திரட்டியில் முதன்மைப்படுத்துவார்கள். அவ்வாறு 20 அக்டோபர் முதல் 27 அக்டோபர் 2008 வரை நான் விண்மீன் பதிவராக இருந்தேன். அந்த காலக்கட்டத்தில் 20 பதிவுகளை எழுதினேன். எனது ஆரம்ப சுகாதார நிலைய அனுபவங்களை வைத்து கிராமப்புற மருத்துவக்கதைகள் என்று நான்கு பதிவுகளும், கல்லூரி அனுபவங்களை வைத்து ஐந்து பதிவுகளும், பள்ளிவாழ்க்கை குறித்து ஒரு பதிவும், திரைப்படங்கள் குறித்து இரு பதிவுகளும், பொது அறிவியல் குறித்து ஒரு பதிவும், சமூக மருத்துவம் – நீரும் நோய்களும் என்ற தலைப்பில் ஏழு பதிவுகளும் என 20 பதிவுகளின் தொகுப்பு தான் இந்த நூல். அந்த கால வலைப்பதிவர்களுக்கு நினைவேக்கத்தை (nostalgia) ஏற்படுத்தவும், முகநூல், வாட்சப் மூலம் இணையம் வந்தவர்களுக்கு வலைப்பதிவு காலம் குறித்த ஒரு சிறு சாளரத்தை திறக்கவும், வலைப்பதிவு வாசிக்கும் உணர்வு அப்படியே (அல்லது பெருமளவு) கிடைக்கவும் கட்டுரைகளையும், மறுமொழிகளையும் தொகுக்காமல் (எடிட் செய்யாயமல்) அப்படியே தந்துள்ளேன். எனவே இது புத்தகமே அல்ல, இது வலைப்பதிவுகளின் வெட்டு, ஒட்டு (காப்பி, பேஸ்ட்). அதனால் புத்தகத்தின் கட்டுக்கோப்பை நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றமடையலாம். நூலை வாங்க இங்கு செல்லவும்
- தர்மாஸ்பத்திரி (அரசு மருத்துவமனை) ஊசி: GH (Government Hospital) Injections
“கொஞ்சம் ஏமாந்து இருந்தாலும் ஊசி போடாம அனுப்பிருப்பாரு அந்த சின்ன டாக்டர். நம்ம பெரிய டாக்டர் தான் ஊசி எழுதி தர சொன்னார். கவருமண்டு ஊசி குடுத்தா இவங்க கை காச குடுக்குற மாதிரி ரொம்பப் பண்றாங்க. மாத்திரை யாருக்கு வேணும்? இந்த மாத்திரைய எப்பவாது காய்ச்சல், தலைவலி வரும் போது போட்டுக்கலாம் கைல இருக்கட்டும். இப்ப ஊசி போடுங்கனா கேக்க மாட்றாங்க.” என்ற ஒரு சராசரி பொதுஜனத்தின் கருத்தின் பின்னால் உள்ள உளவியல் என்ன ? அரசு திட்டங்களை சலுகையாக பார்ப்பவர்களுக்கும், அதை உரிமையாக பார்ப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? ஆகிய கேள்விகளுக்கு உங்களை விடை தேட வைக்கும் உரையாடல்கள் உள்ள சிறு நூல்அரசு திட்டங்களை சலுகையாக பார்ப்பவர்களுக்கும், அதை உரிமையாக பார்ப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற கேள்விக்கு விடை. நூலை வாங்க இங்கு செல்லவும்.
- தேயும் நடுத்தர வர்க்கம் அதிகரிக்கும் கடன்கள் : Waning Middle Class and Waxing Debts: http://www.pgmed.org/wmc தமிழக பொருளாதார மாற்றம் குறித்த சில கட்டுரைகள் தனியார்மயம், உலகமயம், தாராளமயம் ஆகியவை தமிழகத்தின் நடுத்தர வர்க்கத்தினரை எப்படி பாதித்தது என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியாக வலைத்தளத்தில் எழுதப்பட்ட சில கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். வலைப்பதிவு வாசிக்கும் உணர்வை நீங்கள் பெற பதிவுகள் எழுதிய காலத்தில் வந்த மறுமொழிகளும் சேர்க்கப்பட்டள்ளன.
- பன்றிக் காய்ச்சல்
ஐஎஸ்பிஎன் 9788184932393 பதிப்பகம் மினி மேக்ஸ் கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்) . நூலை வாங்க இங்கு செல்லவும்.
- 51. TargetPG TNPSC 3rd Edition 1995 to 2009 : (References and Explanations for All 18 Papers from 1995 to 2009) Details of the Book:
- ISBN: 978-81-89477-18-9
- Price: Rs.550
- Available through Online Order at INSTAMOJO and in case of any difficulty, Please contact Aravindan Whatsapp 8105882022 Mobile 7708479380 email aravikrish@gmail.com Same day dispatch for orders confirmed before 5PM
- 18 Original Question Papers from 1995 to 2009. Only Book that covers all questions asked in the past two decades
- Special TNPSC 2009 Nov
- General TNPSC 2009 Feb
- Special TNPSC 2007 Dec
- TNPSC 2007 May MHO Recruitment
- General TNPSC 2005 October
- General TNPSC 2003 October
- Special TNPSC 2003 July
- 2000 Medical Science
- 2000 Medical Science
- 1999 Medical Science
- 1999 Medical Science
- 1998 Medical Science
- 1998 Medical Science
- 1997 Medical Science
- 1996 Medical Science
- 1996 Medical Science
- 1995 Medical Science
- 1995 Medical Science
- 3120 Original Questions
- Answers Extensively Referenced from Standard Textbooks.
- Detailed Explanation for Each Answer.
- Questions with more than one answer (or no answer) are pointed out.
- Relevant Diagrams and Tables
- Other possible points in the topic that have been asked and can be asked are explained.
- High Yield Topics are enumerated
- Comments, Tips and Mnemonics for solving.
- Notes on Preparation and Strategy Management.
- Handy Size – Easy to Carry.
- Online Extension at www.targetpg.in and www.mcqsonline.net
- Brought out by TargetPG
- Title: Target Pg Series TNPSC
- Authors: Dr Bruno, Dr Amali
- Edition: Third ( March, 2013)
- Pages: XII + 1178
- Size : 21 cm X 14cm
English Books